என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Wednesday, August 11, 2010

மலை உச்சி மடாலயம்எத்தியோப்பியாவின் பழமையான மடாலயங்களில் ஒன்றான டெப்ரா டெமோ (ஞிமீதீக்ஷீணீ ஞிணீனீஷீ) மடாலயம் டிக்ரே நகரில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ளது. சுமார் 1400 ஆண்டுகள் பழமையான இந்த மடாலயத்தைக் காண உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மற்ற சுற்றுலாத் தலங்களைப் போல அவ்வளவு சுலபத்தில் இங்கு சென்றுவிட முடியாது. காரணம் இந்த மடாலயம் 75 அடி உயரமுள்ள செங்குத்தான மலையில் அமைந்துள்ளது. மலை உச்சியில் இருந்து தொங்கவிடப்படும் ஒரு கயிற்றை இடுப்பில் கட்டிக் கொண்டு, மற்றொரு கயிற்றைப் பிடித்து ஏறித்தான் உச்சிக்கு செல்ல வேண்டும்.

டெப்ரா டெமோ மடாலயம் அபுனா அராகவி (கிதீuஸீணீ கிக்ஷீணீரீணீஷ்வீ) என்ற துறவியால் நிர்மாணிக்கப்பட்டது. ஒரு ராட்சத பாம்பு அவரை இந்த மலை உச்சிக்கு கொண்டு வந்ததாகவும், பிறகு அவர் இந்த மடாலயத்தை உருவாக்கியதாகவும் ஒரு நாட்டுப்புறக் கதை உள்ளது. இதன் அருகிலேயே ஒரு கிறிஸ்துவ தேவாலயமும் உள்ளது. எளிதில் அணுக முடியாத உயரத்தில் தனித்திருந்ததால் எத்தியோப்பியாவின் பல அரிய கையெழுத்துப் பிரதிகளை அக்காலத்தில் இந்த மடாலயத்தில் பாதுகாத்து வந்தனர். அவை இன்னும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த பழங்கால தேவாலயத்தின் தூண்களிலும், உட்புற கூரையிலும் வரையப்பட்டுள்ள அற்புத ஓவியங்களும் எத்தியோப்பியாவின் கலைப் பொக்கிஷங்களாக கருதப்படுகின்றன.

அக்காலத்தில் நூற்றுக்கணக்கான துறவிகள் இந்த மடாலயத்தில் தங்கி தியானத்தில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் மக்கள் இவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கி வந்தாலும், இந்தத் துறவிகளும் மலையடிவாரத்தில் ஆடு, மாடுகளை மேய்த்தும், தானியங்களை பயிரிட்டும் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டுள்ளனர். தண்ணீர் தேவைக்காக மலை உச்சியிலேயே ஒரு பெரிய நீர்த்தேக்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர். மற்ற எத்தியோப்பிய மடாலயங்களைப் போல இங்கும் பெண்களுக்கு அனுமதி இல்லை.

No comments:

Post a Comment