என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Wednesday, March 30, 2011

மறுபிறவி


புதிதாய் பிறக்கிறேன் நான்...
நொடிக்கு நொடி
அன்பாய் அரவணைத்து
அடித்துத் துவைத்து
செதுக்கித் தள்ளி
எத்தனையோ கைகள்
எத்தனையோ விதங்களில்
கைம்மாறு கருதாமல்
கற்றுத் தருகின்றன
கடைத்தேற்றி விடுகின்றன
அந்நேரம் வலித்தாலும்
ஆயுளுக்கும் வலுசேர்க்கும்
புதிய புதிய சிந்தனைகளால்
புதிதாய் பிறக்கிறேன் நான்

2 comments:

  1. நெடு நாள் கழித்து ஒரு பதிவு.

    நல்லதொரு கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  2. "மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை" என அகஸ்தியர் கூறுவதும் இதுவே!
    மறுபிறவி http://sagakalvi.blogspot.com/2011/12/blog-post_30.html

    ReplyDelete