என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Monday, January 24, 2011

பொன்மாலைப் பொழுது


ஒரு காந்தம், சிறு இரும்பு

ஈர்ப்பின் வசமிழந்தும்

உறுதியாய் இருந்தும்

சேர்ந்தும், சேராமலும்

பேரின்ப பேரவஸ்தையில்

லேசான போதையில்

மிக லேசான தெளிவில்

எல்லைகள் மறந்து(?!)

உலகை கழற்றி வீசி

பேசிப் பேசிப் பேசிப் பேசி

இருத்தலே இன்பமாய்

இருந்துவிட்டு வந்த

பொன்மாலைப் பொழுது...

1 comment:

  1. நண்பரே,
    இது போல பல பொன்மாலை பொழுதுகள் உங்கள் வாழ்வினில் வந்து வசந்தம் வீசட்டும்.

    ReplyDelete